திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அடப்புகாட்டு குட்டையில் சட்ட விரோதமாக கிராவல் மண் திருடப்படுவதாக கூறி, இரு லாரிகளை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சிறைப்பிடித்தனர். அரசு அனுமதித்த அளவைவிட மண் எடுக்க கூடுதலாக தோண்டப்படுவதாக விவசாய சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில், அங்குசென்ற போலீஸார், இரு லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.