சென்னை மயிலாப்பூர் ஆண்டார் நைனியப்பன் தெருவை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் அடியாட்களை வைத்து தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த ஜகன்நாத் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் மாநகராட்சி இடத்தை அபகரித்து கார் செட்டுக்காக வாடகைக்கு விடுவதாகவும், தள்ளுவண்டி கடைகளில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.