பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரஸ் நாட்டு வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலாவை எதிர்த்து அவர் விளையாடினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட சபலென்கா 6க்கு 3 மற்றும் 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.