ஓம் நமசிவாய, ஓம் சரவணபவா என தமிழில் அழகாய் பாடி அசத்திய ஜப்பான் நாட்டு முருகர் பெண் பக்தர். நாளை பழனியில் நடக்க இருக்கும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை வந்தபோது பாடி அசத்தினர். பழனியில் உள்ள ஆண்கள் கலை கல்லூரியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 55 பேர் ஜப்பான் நாட்டில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்தடைந்தனர். இன்று சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி பல்வேறு சுற்றுலா தளங்களை பார்வையிட்டு, மகாபலிபுரத்தில் உள்ள பிரதான சின்னங்களை பார்வையிட்டனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் மீது ஆர்வமாகவும், தமிழ் கடவுள் முருகர் தீவிர பக்தராக உள்ளதால் உலக முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார். மேலும் ஓம் நமசிவாய, ஓம் சரவணபவா என தமிழில் அழகாய் பாடி அசத்திய ஜப்பான் நாட்டு முருகர் பெண் பக்தர் அசத்தியுள்ளார். நாளை நடைபெறவுள்ள உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஜப்பானை சேர்ந்த 55 பேர் கலந்து கொள்வதற்கு இன்று தனியார் பேருந்தில் சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து பழனி புறப்பட்டனர். அதேபோல் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண்கள் உயிர் எழுத்துகளான அ,ஆ, இ என அனைத்து தமிழ் மொழியில் உச்சரித்து அசத்தினர். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி வணக்கம் என்றும் தமிழில் பேசி அசத்தினர். ஜப்பான் நாட்டில் இருந்து எங்களை அழைத்த தமிழ்நாட்டு அரசுக்கும், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து கொண்டனர். தமிழ்நாட்டில் உணவு, கலாச்சாரம் அருமையாக உள்ளது என்றும் நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.