ஹேமா ஆணையம் முன் சாட்சியம் அளித்தவர்களில் யாராவது புகார் அளித்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றம் செய்தவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.