குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் துறையாக செயல்பட வேண்டும் என காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் மனித வளர்ச்சியின் அனைத்துக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு - குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான், நமக்கெல்லாம் பெருமை. இதில் பூஜ்ஜியம் வாங்க - 100 விழுக்காடு அர்ப்பணிப்புடன், அனைத்துக் காவலர்களும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.தமிழக முதல்வரின் பெண் காவலர்களுக்கான சிறப்பு அறிவிப்பிற்கு விருது பெற்ற பெண் காவலர்கள் மிகுந்த வரவேற்பை தெரிவித்துள்ளனர். அச்சமில்லாமல் குழந்தையை பெற்றோர்கள் வீட்டில் விட்டுவிட்டு பணியை செய்ய முடியும் எனவும் பணியில் சிறந்து விளங்க முதல்வரின் அறிவிப்பு உற்சாகம் அளிப்பதாகவும் பெண் காவலர்கள் தெரிவித்துள்ளனர். பெண் காவலர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்