Also Watch
Read this
பிரபல மலையாள இயக்குநர் மீது பெங்காலி நடிகை பாலியல் புகார்.. இருட்டான அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றார்
நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார்
Updated: Aug 24, 2024 02:20 PM
பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும், கேரள அரசின் திரைப்பட அகாடமி தலைவருமான ரஞ்சித் தம்மிடம் தவறாக நடந்து கொண்டதாக பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா தெரிவித்துள்ளார். 2009 ல் ரஞ்சித் டைரக்ட் செய்த பாலேரி மாணிக்கம் என்ற படத்தின் போது தம்மை சந்திக்க அபார்ட்மென்டுக்கு வருமாறு ரஞ்சித் அழைப்பு விடுத்ததாகவும், அங்கு சென்ற போது, இருட்டான அறைக்கு அழைத்து சென்று கை, கழுத்து மற்றும் தலைமுடியை தவறான எண்ணத்துடன் தடவியதாகவும் நடிகை ஸ்ரீலேகா மித்ரா தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செய்தி வெளியானதும், கேரள திரைப்பட அகாடமியில் இருந்து ரஞ்சித்தை நீக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved