அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. வேளாண் உதவி இயக்குனராக எழில் ராணி என்பவர் பணியாற்றி வரும் நிலையில், அவரிடம் சிக்கிய பணம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.