புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பட்டா மாறுதலுக்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். கடவாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார், ஜமால் முகமது என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக 3 ஆயிரம் ரூபாய் பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.