"பாஜகவினர் ஆட்சி அதிகார திமிரில் மிரட்டுகின்றனர். ""அதிமுக கருடன் போல் அண்ணாமலை சிவன் கழுத்தில் சுற்றி இருக்கும் பாம்பைப் போல் இருப்பதாகவும், பாம்பு கீழே விழுந்தவுடன் கருடன் கொத்தித் தூக்கும் " என ஆத்தூரில் நடைபெற்ற உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சுசேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான செம்மலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே பேசினார்.கட்சியினர் துவண்டு விடாமல் கட்சி பணியாற்ற வேண்டும் 2026 ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக வரவேண்டும் என பேசினார். தொடர்ந்து சிவன் கழுத்தில் இருக்கும் பாம்புபோல் அண்ணாமலை என்றும் வானத்தில் இருக்கும் கருடன் போல் அதிமுக இருப்பதாகவும், நம்மைப் பார்த்து கருடா சௌக்கியமா என பாம்பு கேட்கிறது இதே பாம்பு கீழே விழும் பொழுது கருடன் கவ்வி கொண்டு போகும் ..மக்கள் விரும்பும் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமியை பார்த்து பயம் வந்துவிட்டது.எனவே இதுபோன்று பேசியது தன்னுடைய செல்வாக்கை புகழை உயர்த்த வேண்டும் எனபேசி வருகின்றனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செம்மலை :திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என சொல்லுகிறபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் சார்ந்து இருக்கிற கட்சி தமிழகத்தில் ஒழியாமல் இருப்பதற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.எங்களைப் பார்த்து ஒழிப்பேன் என சொல்லுவது எட்டா கனிக்கு கொட்டாய் விடுவது போல அவரது பேச்சு அமைந்துள்ளது.அவரது பேச்சை நாங்கள் பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை.பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் பாஜகவை தொடர்ந்து விமர்சிப்பதை இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம் அதிமுகவினர் மீது இருக்கும் ஊழல் வழக்குகளை துரிதப்படுத்த நீதிமன்றங்களை நாடுவோம் என தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு: ஆட்சியில் இருக்கின்ற அதிகார திமிரில்பேசுகின்ற பேச்சாகத்தான் பார்க்கின்றோம்.அப்படி எங்களை மிரட்டி பணிய வைக்க முடியாது. ஒரு தேசியக் கட்சியில் மாநில தலைவராக இருந்து கொண்டு ஒரு கட்சியின் தலைவரை அவதூறாக பேசினால் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வழக்கு தொடரத்தான் செய்வார்கள் அதை அவர் சந்தித்துதான் ஆக வேண்டும்.என தெரிவித்தார்.