காசாவில் இஸ்ரேலிய பணய கைதிகள் 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதால் ஆத்திரமடைந்து போராட்டத்தில் குதித்த மக்களை சாலையில் தரதரவென இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர். ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணயக்கைதிகளில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததையடுத்து, அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் செய்த மக்கள், மீதமுள்ள 101 பணயக்கைதிகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க பிரதமர் நெதன்யாகுவை வலியுறுத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த போலீசார், பின்னர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.