நடிகை மேகா ஆகாஷுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் இளைய மகன் சாய் விஷ்ணுவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த புகைப்படங்களை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஜோடிக்கு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. அதில் திரையுலக பிரபலங்களும், முன்னணி அரசியல்வாதிகளும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. முன்னதாக தனது வருங்கால கணவர் சாய் விஷ்ணுவுடன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து மேகா ஆகாஷ் திருமணத்துக்கு அழைப்பு விடுத்த புகைப்படங்கள் வெளியாகின.