திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் திமுக எம்எல்ஏ நல்லதம்பி தூண்டுதலின் பேரில் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் சென்னை DGP அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு சிவ கண்ணன் என்பவர் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியதாகவும், தற்போது திமுக எம்எல்ஏ நல்லதம்பி தூண்டுதலின் பேரில் பிரபாகர், பிரேமா என்பவர்களுக்கு சொந்தமானது போல் அதிகாரிகள் பட்டாவை மாற்றி சான்றிதழ் அளித்துள்ளதாகவும் நில உரிமையாளர் சிவ கண்ணன் வேதனையுடன் தெரிவித்தார்.