இலஞ்சி அருகே இருசக்கர வாகன மோதி மூதாட்டி பலி. பரபரப்பு சிசிடி காட்சி வெளியானது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை - இலஞ்சி சாலையில் உள்ள கொட்ட குளம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் இசக்கியம்மாள் இவரது தாயார் ஈஸ்வரி என்ற சேவுகத்தி 80 வயது மூதாட்டி மகள் வீட்டில் இருந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:20 மணி அளவில் சாலையை கடக்க முயன்ற பொழுது குற்றாலம் பகுதியை சார்ந்த மிக்கேல் மகன் மூர்த்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த பொழுது சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டார் அதேபோன்று இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த மூர்த்தியும் தூக்கி வீசப்பட்டார் இருசக்கர வாகனம் சுமார் 300 அடி தூரத்தில் போய் பள்ளத்தில் விழுந்தது இதில் மூர்த்தி பலத்த காயமடைந்தார் அதேபோன்று மூதாட்டியும் பலத்த காயம் அடைந்தார் மூதாட்டி ஈஸ்வரி என்ற சேவகத்தி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார், இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர் மூர்த்தி படு காயங்களுடன் நெல்லை மாவட்ட மருத்துவமனையில் அனுமதி, காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் இந்த விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் இன்று வெளியாகி உள்ளன நெஞ்சை பதற வைக்கும் அந்த சிசிடிவி காட்சிகள் காண்போரை நெஞ்சை உருக்கும் வண்ணமாக அமைந்துள்ளது.