தென்காசியில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் இருந்து பாறை உருண்டு விழுந்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். குற்றாலம் மெயின் அருவியில் ஆண்களுக்கான பகுதியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது பெரிய அளவிலான பாறை உருண்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.