மேற்குவங்கத்தில் இரவுப் பணியில் இருந்த செவிலியரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கெனவே பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்குவங்க மக்களை கொதிப்படைய செய்துள்ள நிலையில், மீண்டுமொரு சம்பவம் நடந்துள்ளது. பிர்பும் என்ற ஊரில் உள்ள இலம்பஜார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளி மருத்துவர் மற்றும் உறவினர்கள் முன்னிலையிலேயே செவிலியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. செவிலியரை நோயாளி அநாகரீகமாக தொட்டதுடன், ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படும் நிலையில் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.