தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சிறுத்தை பாய்ந்து வந்து தாக்கியதில் வன காப்பாளர் ரகுராம் பாண்டியன் என்பவர் காயமடைந்தார். குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வருவதாக மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் அருகிலுள்ள புதருக்குள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதருக்குள் இருந்த சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த வன காப்பாளர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனிடையே சிறுத்தை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.