ஆந்திராவில் அனுமதி இல்லாமல் பாதிரியார் நடத்தி வந்த விடுதியில் சமோசா சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனக்கா பள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினம் கிராமத்தில் பாசா டிரஸ்ட் என்ற பெயரில் பாதிரியார் கிரண் குமார் விடுதி ஒன்றை நடத்தி வந்த நிலையில், அங்கு தங்கி படித்து வந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி எடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.