ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக வந்த மினி ஆட்டோ மோதி விபத்து. திருச்சி மாவட்டம் மாயனூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சமையல் பணிக்காக மைசூருக்கு சென்று கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2 தினங்களாக சமையல் பணியில் ஈடுபட்டு பணி முடித்துவிட்டு நேற்று இரவு பெங்களூரில் இருந்து மினி ஆட்டோவில் ஓட்டுநர் மூர்த்தி மாயனூர் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல் ஏற்றிச் சென்ற லாரியானது பழுதாகி தேசிய நெடுஞ்சாலை நின்றுள்ளது. அதிவேகமாக வந்த மினி ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஓட்டுனர் மூர்த்தி பலியாகி நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் இருவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் தேசிய நெடுஞ்சாலை பழுதாகி நின்ற லாரி ஓட்டுநர் லாரியின் பின்புறத்தில் எவ்வித எச்சரிக்கை பலகை இல்லாததாலும், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.