கேரளாவில் அஜாக்கிரதையாக சாலையில் திரும்பிய கார் சாலையில் வந்த பேருந்து காரின் மீது மோதி விபத்து விபத்து ஏற்படுத்திய காரின் ஓட்டுனர் தப்பி ஓட்டம் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஏட்டுமனூர் பகுதி உள்ள எம் சி சாலையில் கார் ஒன்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது அப்போது சாலையின் எதிர் திசையில் செல்வதற்காக எதிரே வரும் வாகனங்களை கவனிக்காமல் காரை சாலையின் குறுக்கே திருப்பியபோது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து கார் மீது மோதியது மோதியபோதும் மீண்டும் கார் ஓட்டுநர் வாகனத்தை அதே பாணியில் திருப்ப முயன்ற போது மீண்டும் பேருந்து மீது மோதியது இதனை எடுத்து காரின் ஓட்டுனர் காருடன் அங்கு இருந்து தப்பிச் சென்றார் ஒரு கிலோ மீட்டர் சென்ற நிலையில் விபத்துக்குள்ளான காரை அங்கே நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பித்துச் சென்றார் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன கார் ஓட்டுநர் எதற்காக அந்த இடத்தை விட்டு தப்பி சென்றார் ? வேறேனும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்றாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்