மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைமேடு கிராமத்தில் உள்ள சுக்கான் குளத்தில் T.மணல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஏழு பேர் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நான்காம் வகுப்பு மாணவர்களான மாவீரன் மற்றும் சக்தி ஆகியோர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமான நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் தேடினர். பின்னர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு இருவர் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டன.