ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்காஞ்சியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கதிர்வேல் என்ற இளைஞரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.