அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னையில் 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதற்கட்டமாக 90.52 கோடி ரூபாய் மதிப்பிலான 150 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.