சமீப காலமா white sugar diet வைரலாகிட்டு இருக்கு. சக்கரையை தவிர்த்ததும் முகம் பளிச்சின்னு இருக்குறதாவும், உடல் எடை குறையிதுன்னும் கூட சொல்றாங்க. இதனால பலரும் சர்க்கரைய முற்றிலும் தவிர்த்துவிட்டு வராங்க. ஆனா இதுனால Low sugar பிரச்சன வரும்ன்னு ஒரு பக்கம் மருத்துவர்களே எச்சரிக்கிறாங்க. அப்போ உடலுக்கு கண்டிப்பா இனிப்பும் தேவைப்படுது. வெள்ளை சர்க்கரைய தவிர்த்து இனிப்பு எடுத்துக்க வெல்லத்த பயன்படுத்தலாம்ன்னும் மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறாங்க. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, செலினியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைஞ்ச வெல்லம், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துது. உணவு சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுறது இன்னுமே நல்லதாம். இது செரிமான நொதிகள சீரா செயல்பட வைக்கிது. அளவோட எடுத்துக்குறது எப்பவுமே ஆரோக்கியத்துக்கு நல்லது.