ஸ்கூல் குழந்தைகளுக்கு லஞ்ச் கட்டும் பெரும்பாலான அம்மாக்களோட விருப்பம் தக்காளி சாதமும் உருளைக்கிழங்கு பொறியலும் அல்லது தயிர் சாதமும் உருளைக்கிழங்கு பொறியலும் தான். எளிமையாக செய்து விடும் இந்த உணவு தன் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்தை தருகிறது என்பது அம்மாக்களுக்கு தெரிவதில்லை. நைட்ஷேடு ஃபுட்(((Nightshade Foods)) என்ற உணவு பற்றியும், அதில் இருக்கும் ஆபத்து குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....உருளைக்கிழங்கு விரும்பாத குழந்தைகளே இருக்க மாட்டாங்க. ஃபிரஞ்ச் ஃபிரை, ஸ்பிரிங் பொட்டடோ, உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை குழந்தைகள் விருப்பமான உணவாக இருக்கு. போதாத குறைக்கு லஞ்ச் பாக்ஸில் அம்மாக்களும் உருளை கிழங்கு பொறியலை வைக்க தவறுவதில்லை. உருளைக்கிழங்கு உடலுக்கு நன்மை தருவதாக இருந்தாலும், அதில் இருக்கும் ஆபத்தையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அதாவது தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய், மிளகு போன்றவை நைட்ஷேடு என்ற தாவர வகையில் வருகின்றன. நிழலில் இருக்கும் என்பதை குறிக்கும் விதமாக இந்த தாவரங்களுக்கு நைட்ஷேடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாவரங்களை இரவில் அதிகமாக எடுத்து கொண்டால் பெரிதாக அனைவரையும் பாதிக்காது. ஆனால், சிலருக்கு மூட்டுவலி, வயிற்று எரிச்சல், ஒவ்வாமை, தோல் அரிப்பு, வீக்கம் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும். நைட்ஷேடு தாவரங்களுடன் காரமும் சேர்த்து சமைப்பதால் மூட்டுக்கள் மற்றும் தசைகள் பாதிப்படையலாம் என கூறப்படுகிறது. எலும்புகளில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் சிலர் இரவில் நைட்ஷேடு உணவுகளை தவிர்க்குமாறு மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். இது தவிர நைட்ஷேடு தாவரங்களில் லெக்டின் என்ற இயற்கை பூச்சிக் கொல்லியும் இருப்பதாக கூறப்படுகிறது. இது வாதம் போன்ற பாதிப்பையும் ஏற்படுத்த கூடும் என சொல்லப்படுகிறது. இதனால் மூட்டு வலி மற்றும் எலும்பு பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவில் நைட்ஷேடு உணவை எடுத்து கொள்வதை தவிர்க்கலாம். குழந்தைகளுக்கும் கால்சியம் சத்து குறையாமல் இருக்க அடிக்கடி நைட்ஷேடு உணவு கொடுப்பதை அம்மாக்களும் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.