கூந்தல் பராமரிப்பில் நாம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தினசரி தலைக்கு எண்ணெய் தேய்க்கலாமா கூடாதா என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.தலையில் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதை விட தினமும் எண்ணெய் தேய்ப்பதினால் உடலுக்கு நிறைய நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி தினமும் தலையில் எண்ணெய் தேய்ப்பதால் தலைமுடிக்கு மட்டுமல்ல உங்கள் உடம்பையே புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க முடியுமாம். மேலும் தினசரி தலையில் தேங்காய் எண்ணெய் வைத்து மாசாஜ் செய்துவர உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறதாம். மேலும் பொடுகு, முடி உதிர்வு போன்ற பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்க உதவுவதா சொல்லப்படுகிறது. மேலும் தலைமுடியில் இருக்கும் சுருள்முடிகளை நேராக்கவும் மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் எண்ணெய் மிகவும் உதவியாய் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் தலைமுடி அடர்த்தியாகவும், கருகருவென்றும் பளபளப்பாக இருக்கவும் தேங்காய் எண்ணெய் மிகமிக உதவியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தலையிலுள்ள மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணெய் மிகவும் உதவியாய் இருப்பதோடு,தலையில் பொடுகு வராமல் தடுக்க, இளநரை வராமலிருக்க, மன அழுத்தத்தைப் போக்க, முடி கருகருவென்றும் பளபளப்பாக இருக்கவும் எண்ணெய் மிகமிக உதவியாக இருக்கு.