protein powder உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவரும் use பண்ணலாம்னு பலரும் நம்புராங்க. உடம்ப fit ஆ வச்சிருக்கனும்னா protein powderதான் பலரின் நினைவுக்கு வரும்.பெரும்பாலும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமே இது தேவைப்படும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.ஆனால், இப்போது எந்த உணவை எடுத்துக்கொண்டாலும் அதில் எவ்வவளவு protein இருக்கு என்பதையே நாம் ஆர்வமாக தேடுறோம். 'காலையில் carbohydrates உணவுகளை தவிர்த்து protein நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் அல்லது ஒரு ஸ்கூப் protein பவுடரை ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடிங்கனு ஆலோசனைகளை சமூக ஊடகங்களில் வரும் உணவுப் பழக்கம் சார்ந்த பெரும்பாலான காணொளிகளில் கேட்ருப்போம். கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியர்களில் 80% பேர் பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான protein யே உட்கொள்வதாகவும், 60-75%proteinகு தானியங்களையே நம்பியிருப்பதாகவும் கண்டறியப்பட்டது. போதுமான protein உட்கொள்வது என்பது விளையாட்டு வீரர்கள் அல்லது உடலை மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அவசியமான ஒன்றுதான்,. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கும், உங்கள் இதயம், மூளை மற்றும் தோல் போன்ற உறுப்புகள் சரியாக செயல்படவும் proteinஅவசியம்.protein பசியைக் கட்டுப்படுத்தி தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் என பல ஆய்வுகள் குறிப்பிடுது.உங்களுக்கு எவ்வளவு protein தேவை என்பது பொதுவாக உங்கள் excercise routine, age , health அ பொறுத்ததுனு சொல்ராங்க மருத்துவர்கள்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையின் (ஐசிஎம்ஆர்) 2020 அறிக்கையின்படி, 65 கிலோ உடல் எடை கொண்ட ஓர் ஆணுக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 54 கிராம் protein தேவை. 55 கிலோ எடை கொண்ட பெண்ணுக்கு 45.7 கிராம் protein தேவை என பரிந்துரைக்கப்படுகிறது.2019ஆம் ஆண்டு, சென்னையில் 1,000 கல்லூரி மாணவர்களிடையே (ஆண்கள் மற்றும் பெண்கள்) நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், protein நிறைந்த உணவுகளின் தினசரி நுகர்வு மிகவும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.ஆய்வில் கலந்துகொண்டவர்களில் (தினசரி முறையில்) 0.2% பேர் மட்டுமே பருப்பை உட்கொண்டனர், 0.7% பேர் முட்டை சாப்பிட்டனர், 1.2% பேர் தயிர் உட்கொண்டனர் , 8.6% பேர் பால் சாப்பிட்டனர். மேலும்,அவர்கள் protein உட்கொள்றது போதுமானதாக இல்லை என்று அந்த ஆய்வு தெரிவித்தது. அதுக்காக , தினசரி protein பவுடர் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல. அதுவும் ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனை இல்லாமல் அப்படி உட்கொள்வது பல ஆபத்துகளை ஏற்படுத்தும், அது ஒரு ஸ்கூப்-ஆக இருந்தாலும் சரி"னு சொல்ராங்க சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் உணவியல் நிபுணர் மீனாக்ஷி பஜாஜ். முடிந்தவரை உணவுகள் மூலமாகவே தினசரி protein தேவையை பூர்த்தி செய்யவேண்டுமென வலியுறுத்தும் அவர், "முட்டை, பால், தயிர், மீன், பருப்பு, இறைச்சி, சோயா, பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற பல உணவு வகைகளில் protein இருக்கு.அதற்கு முன்னுரிமை அளிக்கலாம்-னு சொல்ராங்க."protein பவுடர் என்பது ஒரு சப்ளிமென்ட் மட்டுமே.அதிக அளவிலான protein தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரலை பாதிக்கும் அபாயம் இருக்கு'.அதேசமயம், protein பவுடர் என்பது முட்டை, பால் மற்றும் தாவரங்கள் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்படலாம் என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கட்டுரை தெரிவிச்சிருக்கு. நீங்கள் protein பவுடர் உட்கொள்ள முடிவு செய்தால், ஊட்டச்சத்து மற்றும் மூலப்பொருள் லேபிள்களை முன்கூட்டியே படிப்பது முக்கியம். ஏனெனில் protein பவுடரில் எதிர்பாராத பொருட்கள் மற்றும் அதிக அளவு சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் இருக்கலாம்." என்றும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது."பலரும் வே புரோட்டீன் (Whey) போன்றவற்றை தன்னிச்சையாக எடுத்துக்கொள்கிறார்கள். அதிக அளவிலான proteinதொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரலை பாதிக்கும் அபாயம் உண்டு. அதிலும் உடற்பயிற்சியே செய்யாதவர்கள் இதை எடுத்துக் கொள்வது இன்னும் ஆபத்தானது." என எச்சரிக்கிறாங்க உணவியல் நிபுணர் மீனாக்ஷி பஜாஜ்.தொடர்ந்து ,அப்படி அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம், சிறுநீரகம் வழியாக சுண்ணாம்புச் சத்து அதிகமாக வெளியேறலாம், ரத்தம் அமிலத் தன்மை கொண்டதாக மாறும் ஆபத்து இருப்பதா சொல்லிருக்காங்க. அதேசமயம், protein பவுடர்களை முழுமையாக ஒதுக்கவும் முடியாது. போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அது பலனளிப்பதாகவும் சில நோயாளிகளுக்கும், முதியோர்களுக்கும் அதை பரிந்துரைப்பதாகவும் சொல்லிருக்காங்க."உதாரணமாக புற்றுநோயாளிகளுக்கு செரிமான கோளாறுகள் இருக்கும். அவர்களால் போதுமான உணவை எடுத்துக்கொள்ள முடியாது. போதுமானproteinஇல்லையென்றால், அவர்களது உடல்நிலை இன்னும் மோசமாகும். அப்படியிருக்க வே புரோட்டீன் போன்றவற்றை பரிந்துரை செய்வதாகவும், ஆனால் அதுவும் ஒரு அளவோடு தான்னு சொல்ராங்க மருத்துவர்கள்.. உடற்பயிற்சி செய்யும் பெரும்பாலானோர் protein பவுடர் எடுத்துக்கொள்வதையும் உடற்பயிற்சி கூடங்களில் இளைஞர்களுக்கு திடீரென ஏற்படும் மாரடைப்புகளையும் குறிப்பிட்டுprotein பவுடர் இதய பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு protein பவுடர் இதய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லைனு சொல்றாங்க மருத்துவர்கல்.. "நமது உடலுக்கு protein மிகவும் அவசியம்,. தினசரி அடிப்படையில் protein பவுடர்களை எடுத்துக்கொள்வதற்கு முன் உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.