மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை அதிகாலை தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.