தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 6 ஆம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியசாகவும் இருக்கக்கூடும் .