தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும் என்பதால், அசெளகரியம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.