தொழில்துறையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டுக்கு பிறகு 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 725 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.