தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ள நிலையில், நடப்பாண்டு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியலை இன்று காலை 10 மணியளவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிடுகிறார்.இதையும் படியுங்கள் : ராமதாஸுடன் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பு