பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின. மருத்துவ படிப்புகளுக்கு வழங்கப்பட்டதை போல பொறியியல் படிப்புகளுக்கும் 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் 13 ஆயிரத்து 886 மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டன.