தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 9 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளும் பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு முடிவுகளுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். தேர்வு முடிவுகளை அரசு இணையதளம், எஸ்.எம்.எஸ் மற்றும் இணையதள போர்ட்டல்கள் வழியாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.