திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பங்கில் 50 ரூபாயிற்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்த இளைஞர்கள் ஊழியரை தாக்கி அவரிடம் இருந்து 7000 ரூபாயை பறித்துச்சென்றனர். கன்னிகாபுரத்தில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு மதுபோதையில் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதாக கூறப்படுகிறது. பங்க் ஊழியர் பணம் கேட்டபோது பணம் தர மறுத்தவர்கள், ஊழியர் குணசேகரனை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் புகாரின்பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இளைஞர்களை தேடி வருகின்றனர்.