பலரை மிரட்டி பணம், நகை மற்றும் பைக்குகளை திருடிய இளைஞர்கள். கொள்ளையடித்த பணத்தில் கொடைக்கானலுக்கு ஜாலி ட்ரிப். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு. சிறைக்குள் இருந்தாலும் எந்நேரமும் திருட்டு பிளான் தான். உடைந்த பீர்பாட்டில் முனையில் ஒருவரை மிரட்டி நகையை பறித்துவிட்டு 20 நாட்களுக்கு மேலாக சிக்காத இளைஞர்கள் போலீசில் தானாக சிக்கியது எப்படி? நடந்தது என்ன?வழக்கம்போல, வாகன சோதனையில ஈடுபட்ருந்துருக்காங்க போலீசார். அப்போ, ரெண்டு பைக்ல வந்த நாலு இளைஞர்கள், காவலர்கள் வாகனத்தை நிறுத்த சொல்லியும், அங்க இருந்து வேகமாக போறதுக்காக பைக்க முறுக்கிருக்காங்க. ஆனா, உஷாரான காவலர்கள் அந்த இளைஞர்களை நகரவிடாம தடுத்து நிறுத்திருக்காங்க. லைசென்ஸ் எங்கே? ஆர்சிபுக் எங்கனு கேட்டப்ப, திருதிருனு முழிச்ச அந்த இளைஞர்கள் வீட்ல இருக்குது எடுத்துட்டு வர்றேனு சொல்லிருக்காங்க. அப்போ, அந்த இளைஞர்கள் முகத்துல ஒருவித படபடப்ப பார்த்த காவலர்கள் காவல் நிலையத்துக்கு அழைச்சிட்டுப்போய் விசாரணை நடத்திருக்காங்க.அப்பதான் அந்த இளைஞர்கள் வந்த பைக்ல ஒன்றான R One Five பைக் திருட்டு பைக் அப்டிங்குறது தெரிய வந்துச்சு. அதோட, அந்த நாலுபேரு மேலயும் தமிழகம் மற்றும் கேரளாவுல உள்ள பல்வேறு காவல் நிலையங்கள்ல, ஏற்கெனவே கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில இருக்குறதும் தெரியவந்துச்சு..அதுக்குப்பிறகு அந்த இளைஞர்கள்கிட்ட துருவித்துருவி விசாரணை நடத்திருக்காங்க. அப்போ, கடந்த அக்டோபர் மாசம் 12 ஆம் தேதி ஒருத்தர மிரட்டி, பணம் பறிச்சதை தாங்களாகவே ஒத்துக்கிட்டாங்க.கன்னியாகுமரி, தேங்காய்பட்டணம் பகுதியை சேர்ந்த விஜின் நட்டாலம் பகுதியில, பெருசா ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில பைக்ல போயிட்டு இருந்துருக்காரு. அப்போ, ஐரேணிபுரம் நிர்மல், தொழிக்கோடு பெண்டன் பின், நட்டாலம் காட்வின், ஆசாரிப்பள்ளம் பிரவின் நாலுபேரும் சாலையில குறுக்க நின்னு விஜினை வழிமறிச்சிருக்காங்க. பீர்பாட்டிலை உடைச்சி கையில வச்சிருந்த நாலுபேரும், கழுத்துல அணிஞ்சிருக்குற செயின், மோதிரம், கைச்செயின் எல்லாத்தையும் நீங்களா கழற்றி குடுத்துட்டா உசுரு மிஞ்சும், இல்லனா கொலை பண்ணிட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு போவோம்னு மிரட்டிருக்காங்க.அதனால பயந்த விஜின், தன்னோட செயின், கைச்செயின், மோதிரம் எல்லாத்தையும் கழற்றி குடுத்துருக்காரு. அத வாங்கின நாலுபேரும் அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க. அதுக்குப்பிறகு, போலீஸ் ஸ்டேஷன்ல போய் நடந்த விவரத்தை சொல்லி, கம்ப்ளைண்ட் குடுத்துருக்காரு விஜின். சம்பவம் நடந்த இடத்துல சிசிடிவி கேமராக்கள் இல்லாததால, கொள்ளையர்களை பிடிக்கிறது போலீசுக்கு பெரும் சவாலவே இருந்துருக்குது.கொள்ளை சம்பவம் நடந்து, 20 நாட்களுக்கு மேலாகியும் கொள்ளையர்களை பத்தின எந்த துப்புமே கிடைக்கல. இதுக்கு மத்தியில சென்னிதோட்டம் பகுதியில வழக்கமான வாகனசோதனையில ஈடுபட்ருந்துருக்காங்க போலீசார். அப்போ, அவ்வழியா வந்து போலீஸ்கிட்டதானாகவே சிக்குன இளைஞர்கள் நாலுபேரும் விஜின்கிட்ட நகைய பறிச்ச விஷயத்தையும் சொல்லிருக்காங்க. நிர்மல், பெண்டன் பின், காட்வின், பிரவீன் நாலுபேருக்கும் மிரட்டி வழிப்பறி பண்றது, கொள்ளையடிக்கிறது இதுதான் மெயின் தொழிலே.அப்படி கொள்ளையடிக்கிற பணத்துல கொடைக்கானலுக்கு ஜாலி ட்ரிப் போற நாலுபேரும் பணம் காலியாகுற வரைக்கும் ரிசார்ட்ல தங்கி மதுபோதையிலயே மிதந்துருக்காங்க. அடுத்து மறுபடியும் ஊர்பக்கம் வர்ற இளைஞர்கள் ஆளில்லாத சாலைகள்ல பைக்ல வர்ற ஆண்கள், தனியா நடந்து போற மூதாட்டிகள், பெண்களை மிரட்டி நகைய பறிக்கிறது, அந்த நகையை வித்து பணமாக்கி, மறுபடியும் ஜாலியா ஊர் சுத்துறதுனு இருந்துருக்காங்க.திருட்டு வழக்கு சம்மந்தமா அடிக்கடி சிறைக்குப்போற இந்த இளைஞர்கள் கம்பிக்குள்ள இருந்தாலும், வெளிய வந்து எப்படி கொள்ளையடிக்கலாம்னு திருட்டு பிளான் தான் போட்ருக்காங்க. இப்டி பல திருட்டு சம்பவங்களை செஞ்ச நாலுபேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில தள்ளுன போலீசார் அவங்ககிட்ட இருந்து R One Five பைக்கையும் பறிமுதல் பண்ணிருக்காங்க.. இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | "உனக்காக தான் அவள கொன்னேன்" "ஒரே குடும்பம்.. 3 பேர்.." நடுங்கவிட்ட கொ*ல | CrimeNews