திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குணா குகையில் தடுப்பு கம்பிகளை தாண்டி செல்லும் இளைஞர்களை தடுக்க மேலும் தடுப்பு கம்பிகளை வனத்துறையினர் அமைத்தனர். குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சில இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தால் தடுப்பு கம்பிகளை தாண்டி செல்வதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தடுப்பு கம்பிகளில் வலை கம்பிகளையும், அகலமாக இடைவெளி உள்ள பகுதியில், கூடுதல் கம்பிகளையும் வனத்துறையினர் அமைத்தனர்.இதையும் படியுங்கள் : ஒகேனக்கல் ஆற்றில் அதிகாரிகள் ஆய்வு... வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு