சென்னையில் இளைஞர்கள் வீலிங் சாகசம் செய்வது அதிகரித்து வரும் நிலையில், போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நகரின் முக்கிய சாலையான விருகம்பாக்கம் சாலையில் இளைஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.