விழுப்புரம் அருகே மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வானூர் அருகே பேராவூர் கிராமத்தில் மாட்டுத் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிக அளவில் கெமிக்கல்கள் மற்றும் கோழி உள்ளிட்டவற்றின் கழிவுகளும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், சுவாச பிரச்னை, ஒவ்வாமை, குமட்டல், வாந்தி உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, நிறுவனத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.