செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் - வண்டலூர் இடையே தண்டவாளம் அருகே சடலமாக கிடந்த இளைஞர் மற்றும் இளம்பெண் சடலத்தை ரயில்வே போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இருவரும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஐ.டி. ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது தற்கொலையா அல்லது விபத்தா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.