மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரோந்து போலீசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லக்கூடிய மேம்பாலத்தில் இந்த இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட ரோந்து போலீஸ், எதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம், வாழ வேண்டிய வயசு வாப்பா என பேசிக்கொண்டிருந்த போதே இளைஞர் கீழே குதிக்க முயன்றார். உடனே துரிதமாக செயல்பட்ட ரோந்து போலீஸ் அவரை ஓடி சென்று காப்பாற்றி, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்