கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மது போதையில் போலீசாரை தாக்கிய இளைஞர் 7 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பர்கூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண் பயணிகளிடம் இருசக்கர வாகனத்தை ரேஸ் செய்த வல்லரசு என்ற இளைஞரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது மது போதையில் இருந்த வல்லரசு போலீசாரை தாக்கிய நிலையில் அவர் மீது பொதுவெளியில் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.