சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு குருபூஜைக்கு சென்ற வாகனங்களில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். வாகனங்கள் மீது பாதுகாப்பு இல்லாமல் ஏறியபடியும், கோஷமிட்டும் பக்கவாட்டில் நின்றபடி சென்றனர்.