Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் உதகையில் செல்ஃபோன் கடையில் இருந்த ப்ளுடூத் ஸ்பீக்கரை எடுத்து லுங்கிக்குள் மறைத்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உதகை பஜார் பகுதியில் உள்ள மொபைல் போன் கடை வழியாக வந்த இளைஞர் ஒருவர் கடைஉரிமையாளரிடம் நலம் விசாரித்துக் கொண்டே கடையில் இருந்த ப்ளுடூத் ஸ்பீக்கரை எடுத்து லுங்கிக்குள் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடைஉரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.