தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே சார் பதிவாளரை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலநீலதநல்லூர் கிராமத்தை சேர்ந்த முனீஸ் என்பவர், அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யமுடியாத நிலத்திற்கு பத்திர பதிவு செய்து தரவேண்டும் என கேட்டதாக தெரிகிறது. அதற்கு அங்குள்ள சார்பதிவாளர் செல்லத்துரை மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த முனீஸ், சார்பதியாளரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு அவரது கன்னத்தில ப்ளார் என்று அறைந்து கொலை மிரட்டல் விடுத்தார்.