திண்டுக்கல்லில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த சாலமன் செல்வராஜ், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 2023 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.