தேனி மாவட்டம் போடி அருகே நீரில்லாத சுமார் 150 அடி ஆழ பாழடைந்த கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் தவித்த இளைஞரை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த விஜயபாரதி, அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைக் கொட்டும் இடமாக மாறிய கிணற்று பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. விழுந்தவுடன் மயங்கிய விஜயபாரதி, காலையில் கண்விழித்து அபயக்குரல் எழுப்பியதையடுத்து மீட்கப்பட்டார். கிணற்றையொட்டி அரசுப்பள்ளியின் சுவர் உள்ள நிலையில், மண்சரிவு ஏற்படும்போது பள்ளி கட்டடம் இடித்து விழும் அபாயம் உள்ளதால் கிணற்றை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையும் படியுங்கள் : வைகை அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறப்பு... மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக திறப்பு