நீர் வீழ்ச்சியின் பாறை இடுக்கில், கால் சிக்கிக் கொண்ட இளைஞரை, ஒரு ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு (Kiliyur Falls), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் வந்துள்ளனர். இவர்கள், நீர்வீழ்ச்சியில் குளிக்கும்போது, 21 வயதான லோகேஷ் என்பவரின் கால், எதிர்பாராத விதமாக, பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டது. உடன் வந்த நண்பர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் வந்த ஏற்காடு தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லோகேஷை மீட்டனர். வலது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.