வந்தவாசி அருகே சிவன் கோவிலுக்கு செல்லும் பாதையை வழிமறித்து, சுவர் எழுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் கண்டவரட்டி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லும் வழியை அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேலு குடும்பத்தினர்கள் ஆக்கிரமிப்பு செய்து சுவர் எழுப்பினர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த 25 வயது இளைஞர் சரத்குமார் கோவிலுக்கு வழி ஏற்படுத்தி தரக்கோரி செல்போன் டவர் மீது ஏறினார்.அப்போது பெண்களும் டவர் ஏறி குதிக்கப்போவதாக போலீசாரிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.