திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் அருகே பைக்கில் வேகமாக சென்ற நபர், சாலையோர கம்பி வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயாபுரத்தை சேர்ந்த அபிஷேக், அழகுமலை பெருந்தொழுவு சாலையில் தனது பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது வளைவில் திரும்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர கம்பி வேலி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளைஞர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.